எழுத்தாளர் அ.முத்துலிங்கம்

தமிழ்ச் சிறுகதை உலகில் அறுபதுகளிலிருந்து இன்றுவரை சளைக்காமல் எழுதிவரும் அ.முத்துலிங்கத்தின் சிறுகதைத் தொகுதிகளை தமிழகத்தில் காந்தளகம், காலச்சுவடு மற்றும் அண்மையில் தமிழினி பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன.

இதுவரை இவரது ‘அக்கா‘ (1964), ‘திகடசக்கரம்‘ (1995), ‘வம்சவிருத்தி‘ (1996), ‘வடக்கு வீதி‘ (1998), ‘மகாராஜாவின் ரயில் வண்டி‘ (2001) மற்றும் ‘அ.முத்துலிங்கம் கதைகள்‘ (2003) ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.

தினகரன் தமிழ் விழா சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு, கல்கி சிறுகதைப் போட்டிப் பரிசு, லில்லி தேவசிகாமணி பரிசு( ‘திகடசக்கரம்’), தமிழ்நாடு அரசு முதற் பரிசு (‘வம்சவிருத்தி’), ஸ்டேட் பாங் ஒவ் இந்தியா முதற் பரிசு (‘வம்சவிருத்தி’), இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு (‘வடக்கு வீதி) ஆகிய பரிசுகளையும் இவர் பெற்றுள்ளார்.

இவரது படைப்புகளைப் பற்றி எழுத்தாளர் அம்பை ” அ.முத்துலிங்கத்தின் கதைகள் நாம் அறிந்த உலகங்களுக்கு நம்மை நாம் அறியாத பாதைகளில் இட்டுச் செல்பவை. நாம் அறிந்த உலகங்களின் கதவுகளையும், சாளரங்களையும், காதல்களையும் ஓசைப்படுத்தாமல் மெல்லத் திறப்பவை” என்று குறிப்பிடுவார்.

நன்றி-மூலம்-http://kalaignarkal.blogspot.comஇணையம்