எழுத்தாளர் இந்திராணி முத்துக்குமார்

இவர் 1948.5.18 ல் ஏழாலையில் பிறந்து அங்கேயே வசித்து வருகிறார். இவர் சிறுகதை, கவிதை, நாடகம், ஆகிய குறைகளில் தன் எழுத்துப்பணியை ஆற்றி வருகிறார். பண்டிதர் சுப்பிரமணியம், மு.ஞானப்பிரகாசம், ஆத்மஜோதி நா. முத்தையா ஆகியோரிடம் தனது கல்வியை கற்று 1980 இலிருந்து தனது கலைப்பணியை ஆற்றி வருகிறார்.

பத்திரிகைகள், வானொலிகள் போன்ற செய்தி ஊடகங்களில் 20 ற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், நூறு கவிதைகளையும் எழுதி பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அவரால் எழுதப்பட்ட நூல்களாக ஞானகாவியம், எழுத்துத்துறையில் ஏழாலை முதலானவற்றை குறிப்பிடலாம். இவற்றுள் எழுத்துத்துறையில் ஏழாலை எனும் நூல் ஏழாலையின் எழுத்தாளர், கலைஞர் பற்றியதாகும்.