எழுத்தாளர் தாமரைச்செல்வி

ஈழத்தின் பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் தாமரைச்செல்வி. 1973 முதல் சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் தாமரைச்செல்வி இதுவரை ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இவருக்கு தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.

வன்னியில் வசித்து வரும் இவர் சுமைகள், தாகம் , வீதியெல்லாம் தோரணங்கள் மற்றும் பச்சை வயல், கனவு போன்ற நாவல்களை எழுதினார். அத்துடன் மழைக்கால இரவு, அழுவதற்கு நேரமில்லை, வன்னியாச்சி போன்ற சிறுகதைத் தொகுதிகளையும்எழுதினார்.

போரினால் மக்கள் பட்ட துன்ப துயரங்களை, வேதனைகளை, கருத்துருவாக்கி மக்கள் படும் அவலங்களை வெளி உலகுக்கு அவரது எழுத்துக்கள் மூலம் எடுத்துக் கூறினார். அந்த வகையில் “அழுவதற்கு நேரமில்லை” என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுதியில் முற்று முழுதாக 1995இன் பாரிய இடப்பெயர்வின் அவலங்களையே சித்தரித்தார். வடபுலப்பெயர்ச்சி, வன்னிக்கான யாழ்ப்பாணப் புலப்பெயர்வு மிகப்பெரிய தாக்கத்தை ஈழத்தவரின் மத்தியில் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்தும் அகதிப் பிரச்சினை அங்கு மோசமடைந்து மிக உக்கிரமான நிலையை தாயகத்தில் கண்டிருந்தது. இந்த நிலைமையைச் சுட்டிக் காட்டும் வகையில் இதிலுள்ள அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

இவருடைய படைப்புக்கள்

நிமிர்ந்து எழுந்ததும் சரிந்து வீழ்ந்ததும் மீண்டும் எழ முயற்சிப்பதுமான வாழ்வு எங்களுக்கானது. எங்களின் வாழ்வுதான் இந்நாவலில் விரிந்து கிடக்கிறது

நாவல்கள்
சுமைகள்
தாகம்
வீதியெல்லாம் தோரணங்கள்
பச்சை வயல் கனவு

சிறுகதைத் தொகுதிகள்
மழைக்கால இரவு
அழுவதற்கு நேரமில்லை
வன்னியாச்சி (2005)

கட்டுரைகள்
பெண்ணின் கலாசாரம்

நன்றி-மூலம்-http://kalaignarkal.blogspot.comஇணையம்