ஓவியர் க.இராஜரத்தினம்

ஓவிய வித்தியாதரிசியாக இருந்து ஓய்வு பெற்ற ஓவியர் க. இராஜரத்தினம் (1927 – 2005) அவர்களால் வரையப்பட்ட ஓவியமே மேலே காட்டப்பட்டுள்ளது. அவரால் வரையப்பட்ட மெய்யுரு ஓவியமாகும். யாழ்ப்பாணத்து ஓவியர்களில் மெய்யுரு வரைதலில் தனிச்சிறப்பு காட்டிய இராஜரத்தினம் அவர்கள் 1948 – 1950 காலப்பகுதியில் இந்தியாவின் பிரபலமான ஓவியரும் சிற்பியுமான றோய் சௌத்திரியின் கீழ் அப்போது இயங்கிய சென்னை அரசு கலை மற்றும் கைவினை கல்லூரியில் பயின்றவர். ஒரு வகையில் இக்கல்லூரியின் நீட்சிகளில் ஒருவரான அவர் 1938 ல் ஓவியர் எஸ். ஆர். கேயால் தொடங்கப்பட்ட வின்சர் கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார்.
நன்றி : நுண்கலைத்துறை, யாழ் பல்கலைக்கழகம்,
உதயன் நாளிதழ்