ஓவியர் வாசுகன்

வேலுப்பிள்ளை பூபாலசிங்கத்தின் மகனாக அளவெட்டியில் பிறந்த வாசுகன் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும், கொழும்பு இந்துக் கல்லூரி, மேற்படிப்பை காசா கல்லூரி சைப்ரஸ்,  பின்னர் தொடர்ந்து University – Paris13 ல் முடித்தார். இவர் கல்வி கற்கும் காலம் முதல் பல்வேறு சித்திரப் போட்டிகளிலும் கண்காட்சிகளிலும் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தி இருந்தார். 1997 ம் ஆண்டு மெலினா மேக்கூறி மண்டபம், சைப்பிறசில் தனது பெரியளவான(2m x 4m) காட்சிப் படுத்தலை செய்திருந்தார்.பிரபல ஓவியரும், ஓவிய ஆசிரியரும்(London and Cyprus), ஓவிய ஆய்வுக் கட்டுரை எழுதியவருமான கிளின் கியூஸ் (Mr.Glyn Hughes) அவர்களின் ஓவிய உதவியாளராகவும் இருந்தார். அநேகமான புதிய படைப்புகளுடனான ஓவிய கண்காட்சி திறப்பு விழாவிற்கு கிளின் கியூஸ், சைபிரசில் இருந்து வருகை தந்து வாசுகனுக்கு உறுதுணை நிற்கவும் தவறியதில்லை. பாரிஸில் முதலாவது ஓவிய கண்காட்சி 2004 இல் அன்னிக் சன்சொனி(Annick Sansoni ) அவர்களின் தலைமையில் செயின் நதி அருகில் பயதார்(Bayadere) இல் நடந்தது. அதனை தொடர்ந்து பரிசிலும், மற்றும் ஏனைய இடங்களிலும் கண்காட்சிகள் நடத்திவருகிறார். இவரின் இந்த முயற்சிகள் ஈழத்து கலைஞர்கள் வரிசையில் பதியப்பட வேண்டியது. பல்வேறு திறமைகள் உள்ள எம் கலைஞர்களின் படைப்புகள், திறமைகள் எம் எதிர்கால சந்ததிக்கும் பயன்பட கூடியவாறு வெளிக்கொணரப்பட வேண்டும்.

2011 ல் இலக்கிய சந்திப்பு (பிரான்ஸ்) ஓவியர் வாசுகனின் ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்படிருந்தது. அவ் ஓவியங்கள் குறித்த உரையாடலும் நிகழ்ந்தது. அந்நிகழ்வை ஓவியர் கே.கே. ராஜா (லண்டன்) அவர்கள் நெறிப்படுத்தினார். ஓவியர் வாசுகனிடம் இருந்து பல்வேறு அனுபவங்களை பெறக்கூடியதாக இருந்தது. இலங்கையின் தமிழ் சிங்கள பிரதேசங்களில் வாழ்வு, பின்னர் சைப்பிரசில் வாழ்வு, தற்போது பிரான்சில் வாழ்வு என பலதரப்பட்ட வித்தியாசமான வாழ்வுமுறை என்னை ஓவியனாக்கியதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது என்றார். உண்மையில் மிக நேர்த்தியாக முரண்பாடுகளை ஓவியமாக்குவதில் கைதேர்ந்தவர். மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியவர்களில் வாசுகன் முக்கியமானவர். இசை சினிமா என தனது பயணத்தை அண்மையில் விசாலாமாக்கியிருப்பவர்.

  


 

2 reviews on “ஓவியர் வாசுகன்”

 1. Vasuhan சொல்கின்றார்:

  Vanakkam Sutharsan,,
  Nandri oviyathin Aatharavukku,,

  valthukkal,, pani thodara,,,

  V.P.Vasuhan

 2. Vasuhan சொல்கின்றார்:

  Vanakkam Sutharsan,,
  Nandri oviyathin Aatharavukku,,

  valthukkal,, pani thodara,,,

  V.P.Vasuhan
  http://www.vasuhan.com