கட்டுவன் சிவஸ்ரீ க.சிவபாதசுந்தரக்குருக்கள்

அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச் சைவகுருக்களாயிருந்தவர். சைவக் கிரியைகள் சம்பந்தமான ஆழமான அறிவும் அனுபவ விளக்கமும் உள்ள இவர், இது சம்பந்தமான பல நூல்களை எழுதிவெளியிட்டுள்ளர். விவாகக்கிரியை விளக்கம் (1982), முத்திராலட்சணவிதி (1982), மகோற்சவ விளக்கம் (1984), மகாகும்பாபிஷேக தத்துவங்கள் (1984), மகோற்சவகாலத் தமிழ்வேதத் திருமுறைத் திரட்டு (1985) முதலான நூல்கள் இவரது சிறப்பாற்றலுக்குச் சான்றாகும்.