கவிஞர் ஆ.மு.சி.வேலழகன்

கவிஞர் ஆ.மு.சி.வேலழகன்கவிஞர் ஆ.மு.சி.வேலழகன் என அடைமொழியிட்டு அவரது ஆற்றல்களை ஒருமுகப்படுத்தப்பட்ட சிறையில் நோக்க கவிஞன் முற்படவில்லை ஏனென்றால் கவிதை மட்டுமின்றி உரைச்சித்திரம், சிறுகதை, நாவல், ஆய்வு என பன்முகப்படுத்தப்பட்ட படைப்புகளில் தனது பெயரை இலங்கையில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் பொறித்துக் கொண்டிருக்கிறார். ஆ.மு.சி.வேலழகன்.

கவிதை நூலுக்கான (செங்காந்தள்) இலங்கை சாகித்திய விருது பெற்ற ஆதிநாராயணன் முத்துத்தம்பி வேல்முருகு (ஆ.மு.சி.வேலழகன்) இலங்கைப் போக்குவரத்துச் சபையில் சாரதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1972 முதல் இன்றுவரை 12 நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவரது சாதனை ஆச்சரியப்படவேண்டியதுடன் கெளரவிக்கப்பட வேண்டியதுமாகும். அதுமட்டுமல்லாது ஒரே தடவையில் இன்னும் 4 நூல்களை இவர் வெளியிடவுள்ளார். என்பதும் இங்கு குறிப்பிடவேண்டிய ஒன்றாகும். இவ் வெளியீடு இனிதே வெற்றி பெற கவிஞன் தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து நிற்கிறது. (2010)

இவரின் படைப்புக்களுக்குக் கிடைத்த வெற்றிகளாக ஏலவே கூறப்பட்ட செங்காந்தள் நூலுக்காக சாகித்திய விருது, தமிழ்நாட்டின் அமைச்சரும் பேராசிரியருமான க.அன்பழகன் அவர்களால் காந்தி காமராஜ் மண்டபத்தில் 1996.05.09 ஆம் திகதி வழங்கப்பட்ட பொன்னாடைக் கௌரவம், கொழும்பில் “சிலோன் யுனைட்டட் ஸ்ரேஜ்” நிறுவனத்தினரால் 12.09.1999 அன்று வழங்கப்பட்ட இலக்கியத்திற்கான விருது, 2003, 2004 இல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்களால் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை மற்றும் 2006 இல் இந்து சமய கலாசாரத் திணைக்களத்தினால் “கலாபூசணம்” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

அதுமட்டுமல்லாது அவரது நாவல்கள் சில பட்டப்படிப்புகளுக்காக பேராசிரியர்களால் ஆய்வுக்குட்படுத்தப் பட்டிருப்பதும் இவரது படைப்பின் தன்மையைப் பறைசாற்றுகின்றன. இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்….

1. தீயும் தென்றலும் (கவிதைத் தொகுதி)

2. சாதியா சதியா (உரைச்சித்திரம்)
3. உருவங்கள் மானிடராய் ( கவிதைகள்)
4. கமகநிலா (சிறுகதைத் தொகுதி)
5. வேலழகன் கவிதைகள்(கவிதைகள்)
6. மூங்கில் காடு (சிறுகதை)
7. விழியும் வழியும் (கவிதைகள்)
8. சில்லிக்கொடி ஆற்றங்கரை (நாவல்)
9. கோடாமை சான்றோர்க்கணி (நாவல்)
10. செங்காந்தள் (கவிதைகள்)

11. இவர்கள் மத்தியிலே (நாவல்)
12. கேட்டுப் பெற்ற வரம் (சிறுகதைகள்)

 

By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம் – kavignan.com இணையம்.