கவிஞர் கமலசுதர்சன்

நூலாசிரியர் கவிஞர் கமலசுதர்சன் ஏற்கனவே நமக்கு நன்கு அறிமுகமானவர் . இவரது முதலாவது கவிதை தொகுதியாகிய மவுனமே வாழ்வாக என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது . இவர் மானுடத்தை நேசிக்கும் கலைஞர் . தத்துவதேடலில் ஆர்வம் மிக்கவர், இவரது தேடல்கள், ஆசைகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புக்கள், எல்லாம் கவிதை ரூபம் எடுத்துவருவதை காணலாம். பெரும்பாலான கவிதைகள் இயற்கை அழிவுகள், யுத்த அழிவுகள், மக்களின் துன்பங்கள், அவலங்கள் என்பவற்றை பேசுகிறன. கவிதை எங்கணும் மனிதநேயம் மறைந்து கிடப்பதை வாசகர்கள் உணரலாம்,
இளைஞரான இவரிடம் மனிதநேயம் வெளிப்படுகிறது. உலகில் உள்ள அனிவரும் துன்பம் ஒழிந்து இன்பத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். சுயநலமே தன் நலமாக கருதும் சமுதாயத்தில் பிறர் வாழ ஆசைபடும் ஒரு கவிஞனை இந்த கவிதை நூல் மூலம் நாம் தரிசிக்கலாம்,

நன்றி- ஞானம் – கலை இலக்கிய சஞ்சிகை – அக்டோபர் 2010