கவிஞர் சண்முகம் சிவலிங்கம்

கவிஞர் சண்முகம் சிவலிங்கம்ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரான சண்முகம் சிவலிங்கம் 1960 களில் எழுதத் தொடங்கியதில் இருந்து தன்னுடைய இறுதிக் கவிதை வரையில் ஈர்ப்புக் குன்றாமல், புதுமை குன்றாமல் எழுதி வந்தவர்.

1939ம் ஆண்டில் பிறந்த சண்முகம் சிவலிங்கம் 1960 களில் எழுதத் தொடங்கியவர். 2012 வரையில் எழுதியவர்.

இதுவரையில் ‘நீர்வளையங்கள்’ [தமிழியல் 1988], ‘சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்’ [காலச்சுவடு 2010] என்ற இரண்டு கவிதை நூல்களாக இதுவரை வெளிவந்துள்ளன.

ஆனால், சண்முகம் சிவலிங்கம் எழுதிய சிறுகதைகள் எவையும் இன்னும் தொகுக்கப்படவில்லை. அவர் ஒரு நாவலை எழுதி வைத்திருந்ததாகவும் கேள்வி.

இதைவிட, விமர்சனங்களையும் எழுதி வந்தார்.

இலங்கையின் கிழக்கே கல்முனை நகருக்கு அருகே உள்ள பாண்டிருப்பில் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் பிறந்து, இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம்பெற்றவர். அறிவியல் துறை ஆசிரியராக பணியில் இணைந்து பின்னர் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார்.

தமிழ்க் கவிதைக்குப் புதிய பரிமாணங்களைத் தந்து தனித்த அடையாளமாகத் துலங்கியவர் சண்முகம் சிவலிங்கம்.

By – Shutharsan.S

நன்றி- ஆக்கம் -கருணாகரன்

மூலம்-http://vallaivelie8.blogspot.comஇணையம்