கவிஞர் வதிரி சி.ரவீந்திரன்

கவிஞர் வதிரி சி.ரவீந்திரன் அவர்கள் இலங்கையின் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான இவர் யாழ்ப்பாணம், சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்டவர்.
கலை-இலக்கியத்தில்  தன்னை உருவாக்கிய தான் வளர்ந்த ‘வதிரி’ மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தனது பெயரோடு ‘வதிரி’ என்ற பெயரையும் இணைத்து படைப்புக்களை படைத்து வருகின்றார்.

கவிஞர் வதிரி சி.ரவீந்திரன்1970ம் ஆண்டு முதல் எழுத்துலக பயணத்தை ஆரம்பித்த இவரின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்,சஞ்சிகைகள், வானொலிகளில் களம் கண்டுள்ளன.
பாடசாலை காலத்திலிருந்தே இவருக்குள் இருந்த வந்த இடையறதா வாசிப்பும் பல சிரேஷ்ட்ட எழுத்தாளர்களோடு இருந்த தொடர்பும் இவரை சிறந்ததொரு படைப்பாளியாக பரிணமிக்க வைத்துள்ளது.

கவிதை,கட்டுரை,விமர்சனம்,ஆய்வு,நேர்காணல், நாடகம்,மெல்லிசைப்பாடல் போன்றவற்றில் தனது ஆற்றலை வெளிப்படுத்திவரும் இவர் கவிஞர்  காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் கவிதைகளினால் ஆகர்ஷிக்கப்பட்டு அவரை தன் மானசீக குருவாக கொண்டு பல அர்த்தபுஷ்டியுள்ள மரபுக்கவிதைகளை படைத்திருந்தாலும் பின்னர் ஏற்பட்ட புதுக்கவிதை வளர்ச்சியினால் புதுக்கவிதை படைப்பதிலும் ஈடுபட்டு மரபு,புதுமை இரண்டிலும் தனது ஆற்றலை வெளிபடுத்தி வருகின்றார்.

இவரின் மெல்லிசைப்பாடல்கள் பல இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகி வருகின்றன.
மரபுக் கவிதையிலே இவருக்கு இருந்த ஈடுபாடும்,அறிவும் சந்தம் நிறைந்த பல மெல்லிசை பாடல்களை எழுதுவதற்கு கைகொடுத்துள்ளது.

கவிஞர் வதிரி சி.ரவீந்திரன்
சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு- இலங்கை
பத்திரிகைகளிலும்,இணையத்தளங்களிலும் இவர் எழுதியுள்ள இலங்கையின் மெல்லிசைத் துறை பற்றிய  ஆய்வுக்கட்டுரை இவருக்கு இருந்த மெல்லிசைத்துறை பற்றிய தேடலையும்  இவரின் அகன்ற பார்வையையும்  எடுத்துக்காட்டியுள்ளது.

கவிஞர் வதிரி சி.ரவீந்திரன்தேசிய நாடக சபை உறுப்பினரான கவிஞர் வதிரி சி.ரவீந்திரன் பல நாடகங்களில் நடித்துள்ளதோடு பல நாடகங்களை எழுதியும் இருக்கின்றார். இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகிய ‘வாலிபர் வட்டம்’, ‘பாவளம்‘ போன்ற காத்திரமான இலக்கிய நிகழ்ச்சிகளில் புடம்போடப்பட்ட இவர் பல கவியரங்குகளில் கலந்து கொண்டும் தலைமை வகித்தும் கவிதை பாடி ரசிகர்களின் மனதில்  என்றும் அழியாத சுவடுகளில் பதித்திருக்கின்றார்.

இவர் எழுத்துறைக்குள்  நுழைந்து நான்கு தசாப்தங்கள் கடந்திருந்தாலும் இவரது கவிதை நூல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை அந்தக் குறை சிங்கள் மொமியில் பல நூல்களை வெளியிட்டு விருதுகள் பலவற்றை வென்றெடுத்த பிரபல புத்தக வெளியீட்டு நிறுவனமான ‘கொடகே‘ யினால் மிக விரைவில் வெளியிடப்பட இருக்கும்
‘மீண்டு வந்த நாட்கள்’என்ற கவிதை நூல் மூலம் நிறைவு செய்யப்பட இருக்கின்றது.

தனது  படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்தில் முத்திரை பதித்துவரும் கவிஞர் வதிரி.சி.ரவீந்திரன் அவர்களின் படைப்புலக பணி மேலும் சுவடுகளை  பதிக்க நாமும் வாழ்த்துவோம்.

கவிஞர் வதிரி சி.ரவீந்திரன் கவிஞர் வதிரி சி.ரவீந்திரன்

By – Shutharsan.S

நன்றி – மூலம் – கவிஞர் அஸ்மின் இணையம்

1 review on “கவிஞர் வதிரி சி.ரவீந்திரன்”

  1. Subra M Subramaniam சொல்கின்றார்:

    Congratulations Vathiry C Raveenthiran