குரும்பசிட்டி இரா.கனகரத்தினம்

உலகலாவிய மட்டத்தில் தமிழர்களின் கலைகள், பண்பாடுகள், சுவடுகளை அறிமுகம் செய்யும் அறிஞராவார்.

உலகத் தமிழர் பண்பாட்டியக்கத் தலைவராயிருக்கும் இவர் “சுவடிகள் காப்பகம்” ஒன்றை வைத்துள்ளார். தமிழர்களின் பண்பாட்டுக் கோலங்களை அன்று முதல் இன்று வரை ஆவணப்படுத்தவுள்ள ஆதாரங்களை இன்றைய கணனியுக நவீன வழிமுறைகளை பேணும் பெருமைக்குரியவர்.
சிறுகதை (“சீசரின் தியாகம் 1952”) வரலாற்று நூல்கள் பலவற்றை தந்துள்ளார். அலைகடலுக்கு அப்பால் தமிழர் (1973), உலகத்தமிழர்  ஐக்கியத்தை நோக்கி (1974) இறி யூனியன் தீவில் எங்கள் தமிழர் (1979), மொறிசியஸ்தீவில் எங்கள் தமிழர் (1980) முதலான பல வரலாற்று நூல்களை தந்துள்ளார். தொடர்ந்து உலக அரங்கிற்தமிழர் பண்பாட்டை நிலைநிறுத்தவல்ல பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.