குரும்பசிட்டி கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை

நாடகத்துறையில் இன்று மிக முக்கியமான ஒருவராக கருதப்படுவார். பட்டதாரி ஆசிரியராக இருந்த இவர் பல நூடக நூல்கள், விழா மலர்கள் என்பவற்றின் ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் விளங்குகின்றார்

இறுதிப் பரிசு (1967), நாடகம் (1969), கூம்பியகரங்கள் (1970), பக்திவெள்ளம் முதலான பல நாடகநூல்களை தந்துள்ளார். அரங்கு கண்ட துணைவேந்தர் (1984), கலையுலகில் கால்நூற்றாண்டு (1974), அரங்க கலைஞர் ஐவர் (1998)

முதலான பல வரலாற்றில் நூல்களையும் தந்துள்ளார்.
அத்துடன் வெள்ளிவிழாமலர் (1974), இரசிகமணி நினைவுமஞ்சரி முதலான மலர்களின் பதிப்பாசிரியராயும் விளங்குகின்றார்.
சாகித்திய மண்டல பரிசு பெற்ற நூலாசிரியர் என்ற பெருமையும் ‘கலாபூசணம்’ விருது பெற்ற பெருமையும் இவருக்குண்டு, தொடர்ந்து நூல்கள் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.