குரும்பசிட்டி நா.பொன்னையா

குரும்பசிட்டி நா.பொன்னையா அவர்கள் பத்திரிகை, நூல் பதிப்பித்தல் துறையில் வரலாற்றுப்பெருமை பெற்றவர்.  இவர் 1930ல் “திருமகள் அழுத்தகம்” என்ற அச்சகத்தை நிறுவினார்.  அதே ஆண்டில் “ஈழகேசரி” வார இதழை வெளியிடத் தொடங்கினார்.  ஈழகேசரி மூலம் பல இளம் எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு.  மறுமலர்ச்சிக்கால இலக்கியகாரர்களை வளர்த்துவிட்டவர் இவர் எனக்கூறுதல் தவறாகாது.  பிற்காலத்தில் ஈழத்து இலக்கிய வானில் பிரகாசித்த, பிரகாசித்துக்கொண்டிருக்கும் திச. வரதராசன் இவரைப்பற்றி “கவின்கலைக்கோர் கலாகேசரி” எனும் நூலை இரசிகமணி கனக செந்திநூதன் வெளியிட்டுள்ளார்.