வயலின் வித்துவான் கேசவமூர்த்தி

வயலின் வித்துவான் கேசவமூர்த்தி

அளவெட்டியைச் சேர்ந்த சிறந்த வயலின் வித்துவானாகிய இவர் நாட்டில் ஏற்பட்ட இடப்பெயர்வை தொடரந்து கொழும்பு சென்று பின்னர் கனடா நாட்டுக்கு புலம்பெயர்ந்து அங்கு நீண்ட காலம் தங்கியிருந்து கலைப் பணி ஆற்றினார். ஈழத்தின் இசை எழுச்சியில் கனதியான பங்கினை ஆற்றியிருந்த கேசவமூர்த்தி கனடா நாட்டில் ஞானோதயம் எனும் கலைக்கூடத்தை தாபித்து அதன் மூலம் இசைவகுப்புக்களை நடாத்தி வந்ததுடன் நிகழ்வுகளையும் தயாரித்து ஆற்றுகை செய்திருந்தார். இவரது திறமையைப் பாராட்டி இசைஞானபூபதி எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பெற்றிருந்தார்.2011 நாலாம் மாதமளவில் இறைபதம் எய்தியுள்ளார்.