கொல்லங்கலட்டி வித்துவ சிரோமணி தா. மூ. பொன்னம்பலபிள்ளை

(1845-1889) மாவையமகவந்தாதி (1887) மாவைச் சித்திரக்கவித்திருவிரட்டை மணிமாலை (1889) ஆறெழுத்துப் பத்து, இரட்டை நாகபந்தம், தேர்வெண்பா, மாலை மாற்று

முதலிய நூல்களை யாத்தவர். தமிழகத்தில் பெரும் புகளோடு வாழ்ந்தவர். இதனால் தமிழகத்து பேரறிஞர்களாலும் போற்றப்பட்டவர். தமிழகத்து பேரறிஞரும் உரையாசிரியருமான ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை மாவையமாக வந்தாதிக்கு விரிவான உரை எழுதியுள்ளார். ஆவர் கூறும் பாராட்டுரை நினைவு கூறத்தக்கது. “புலவர் திலகராகிய பொன்னம்பல பிள்ளையின் கலைநயமும் கவித்திறமும் புலமை மாண்பும் கவினுறக் காட்சிதரும் இந் நூலின் பாடல்களை யான் ஓதி மகிழ்ந்து உரைவரைந்தேன்.