கொல்லங்கலட்டி வ. குமாரசாமி பீ.ஏ

அவர்கள் சட்டத்தரணியும் பேரறிஞருமாவார். யாழ்ப்பாண மக்களின் சமூக நிலையை ஆராய்ந்து ‘ஞாயிறு’ என்ற இதழில் தொடர் கட்டுரைகள் எழுதியவர். யாழ்ப்பாண வரலாற்றோடு தொடர்புடைய கதிரமலைபள்ளு, தண்டிகைக் கனகராயன்பள்ளு ஆகிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். யாழ்ப்பாணத்தில் இயற்றப்பட்ட முதல் வரலாற்று நூலாகிய ‘கைலாய மாலை’ யைப் பதிப்பிக்க ஏற்பாடுசெய்து கொண்டிருந்தபோது காலமானார். மகன் கு. வன்னியசிங்கம் அவர்கள் சகோதரி இராசேசுவரி கணேசலிங்கத்தைக் கொண்டு உரை எழுதுவித்து, தமிழக அறிஞர் செ. வே. ஜம்புலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டது.