சங்கர லிங்கம் சுவாமியார்.

இவர் இணுவில் கிழக்கைச் சேர்ந்தவர். சிவகாமியம்மனுக்கு தொண்டு செய்வதையே தனது பயனாக கொண்டார். சுpறு வயதிலிருந்து தாயாருடன் சிவகாமியம்மன் ஆலயத்திற்கு சென்று தொண்டுகள் செய்துவந்தார். தாயாரும் தொண்டுகள் செய்வதினையே சிறப்பாக மேற்கொண்டார். நண்பர்கள் பலருடன் சேர்ந்து பஜனை பாடினார். இவருடைய இனிமையான குரல் பண்ணிசை பாடும் போது எவரினையும் இறைவன்பால் ஈர்க்க வல்லது. தியாகராயா சுவாமிகளுடன் இணைந்து கூட்டுப்பிரார்த்தனைக் குழு ஒன்றினை உருவாக்கினார். இவருடைய பஜனைக்குழு சிறப்படைந்து வந்தமையால் இணுவில் பஜனைக்குழு எனப் பெயர் பெற்றது. இணுவில் சிவகாமியம்மன் கோயில் இளைஞர் சங்கத்தின் ஊடாக பல சிறப்பான பணிகளையாற்றினார்.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்