சிரித்திரன் சுந்தர்

சுந்தர் எஸ்.ஆர்.கனகசபையின் ஆகர்ஷிப்பால் சுயமாக கீறத் தொடங்கியவர். பம்பாயில் சேர்.ஜெ.ஜெ.ஸ்கூல் ஒப் ஆட்ஸ் இல் பயின்றவர். “லோக்சத்த” என்ற மராட்டிய பத்திரிகையிலும் ஆங்கில பத்திரிகைகளான “பிளிட்ஸ்” “கொஞ்ச்” என்பவற்றிலும் இலங்கையின் பெரும்பாலான தமிழ் பத்திரிகையிலும் இவர் காட்டூண்களை கீறியிருக்கிறார். இந்தியாவில் இருந்த காலங்களில் றாஜாராம் என்பவரிடம் உருவ ஓவிய வரைபிலும் சார்க்கோல் வரைபிலும் பயிற்சி பெற்றார். இந்திய சுதந்திர போராட்ட காலத்திலும் இந்து முஸ்லீம் கலவரங்களின் போதும் அரசியல் காட்டூண்களை கீறியுள்ளார். 03.03.1924 இல் பிறந்தார் பெயர் சி.சிவஞானசுந்தரம் (சுந்தர்)

——–நன்றி——
தேடலும் படைப்புலகமும் (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்) தொகுப்பு : அ.யேசுராசா,     இ.பத்மநாப ஜயர்,    க.சுகுமார்