சுப்பிரமணியம் குமாரசாமி

தவத்திரு வடிவேற் சுவாமிகளின் மாணவராவார். இணுவில் மேற்கைச் சேர்ந்தவர். இணுவிலிலே அமைவு பெற்ற கந்தசாமியாலயத்தை வழிபாடு செய்தவர். யாழிலும், குழலிலும் இனிமையான குரல்வழத்தினைக் கொண்டவர். திருமுறை ஓதுவதிலும் பஜனை பாடுவதிலும் சிறப்புற்று விளங்கினார். முருகனிடம் கூடிய ஈடுபாடு கொண்டவர். நல்லூர், சந்நிதி போன்ற ஆலயத்திற்கு அடிக்கடி சென்று வழிபாடாற்றி வருவார். இவரது இறை சேவையின் பயனாகவே மூத்த புதல்வன் பட்டதாரியாகி கற்பித்தல் பணியை மேற்கொண்டு வருகின்றார்.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்