செல்லையா கந்தையா

அமரர் கந்தையா அவர்கள் சுதுமலை கிராமத்தில் செல்லையா செல்லாச்சி தம்பதியரின் மூத்த புதல்வராய் பிறந்தார்.

தான் பிறந்த சமூகத்தின் உயர்வுக்காய் உழைத்த அமரர் கந்தையா சிறுவயதிலேயே புராண படனம் ஓதிப் பொருள் கூறும் முறையை பயின்று பின்னர் ஆலயங்களில் சிறப்புற வெளிப்படுத்தி வந்தார்.

சுதுமலை ஈஞ்சடி வைரவர் ஆலய திருப்பணி சபை தலைவராக பொறுப்பு வகித்து 1978இல் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பபுற நடைபெற உழைத்தவா்களில் முக்கியமானவா். ஆசிரியராக தொழிற்சங்க தலைவராக சமூகப் பணிகளோடு சமய பணியிலும் முன்னின்று உழைத்தார்.