செ.சிவகுருநாதன்

நாதஸ்வரமேதை சிதம்பரநாதனின் சகோதரரான இவர் தனது தந்தையாரிடம் ஆரம்ப இசைஞானத்தைப் பெற்று பின்னர் தமிழ்நாடு சென்று பல திறன்மிக்க வித்துவான்களிடம் அக்கலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். அளவெட்டியில் ஏற்பட்ட புலப்பெயர்வை அடுத்து இடம்பெயர்ந்த இவர், தற்பொழுது கனடா நாட்டில் ஓர் இசைக்குழுவை அமைத்து நாதஸ்வர இசையைப் பரப்பி வருகின்றார்.