சைவப்பெரியார் சிவபாதசுந்தரம்

தூய வெண்ணீறு நெற்றியில் துலங்க வெள்ளை நிற வேட்டியையும் மடித்துக் கட்டி பொருத்தமான சால்வையாற் போர்த்துக்  கொண்டு பெயர் பெற்ற சைவக்குடுமியுடன் குமிழி மிதியடியில் இந்த 20 ம் நூற்றாண்டின் மத்தியிலும் உலாவி வந்தவர். பெரும் சிந்தனையாளரான பேராசிரியர்கள் விரிவுரையாற்றும் போதும் அன்பர்களுடன் அளவளாவும் போதும் தர்க்கமுறையில் அழகுபட தாம் சிரிக்காமலே பிறரைச் சிரிக்க வைத்து வி~யத்தை விளக்குவார். அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய நூல்கள் பல. அவற்றுள் அகநூலும், திருவருட்பயன் உரையும், சைவபோதக் கதைகளும் எம் நினைவை விட்டகலா. புலோலி சிவபாதசுந்தரமவர்கள் தம் உடல் பொருள் ஆவி மூன்றையும் சைவத்திற்கே அற்பணித்தவர். அவரின் இறுதி மூச்சு திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணியாகும்.