ச.வயித்தியலிங்கபிள்ளை

இயற்தமிழ் போதனாசிரியர். ஆறுமுகநாவலர் வழி சைவத்தமிழ் தனித்துவத்தைப் பேணியவர். தொடர்ந்து வழிப்படுத்தி வந்தவர். கிறிஸ்தவ எதிர்ப்புக் கண்டனங்கள், பதிப்பு முயற்சிகள், இலக்கிய ஆக்கங்கள், பத்திரிகை வெளியீடுகள் என இவரது முயற்சிகளை வகைப்படுத்தலாம். பாரதிநிலைமுத்திராசரசாலை என்ற அச்சுக்கூடத்திற்கூடாக பதிப்பு முயற்சிகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் பிறந்த இடம் வல்வெட்டித்துறை.