தமிழருவி த.சண்முகசுந்தரம்

மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இவர் மகாஜனாக் கல்லூரியின் அதிபராயிருந்ததுடன் தலைசிறந்த இலக்கிய கர்த்தாவாகவும் திகழ்ந்துள்ளார்.     பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வித்தியானந்தன் ஆகியோராற் பெரிதும் மதிக்கப்பட்டவர். இலங்கைக்கலைக் கழகத்தின் உறுப்பினராக இருந்து கலைப் பணி புரிந்துள்ளார். நாடகம்;, நாவல், வரலாறு, கலை, இலக்கியம் ஆகிய பல்துறைப்படைப்புக்களைத் தந்துள்ளார்.

வாழ்வுபெற்றவர் வல்லி(1963), பூதத்தம்பி(1964), இறுதிமூச்சு (1965) முதலான நாடக நூல்களின் ஆசிரியர். இவரது ‘மீனாட்சி;’ எனும் நாவல் 1974இல் வெளிவந்தது. பேராசிரியர் ‘கணபதிப்பிள்ளை’ எனும் நூலும் பேராசியர் வித்தியானந்தன் பற்றிய ‘கலைமகிழ்நன்’(1984) நூலும், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி பற்றிய “சிவத்தமிழ்ச் செல்வம்” (1925) எனும் நூலும் ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு வளம் சேர்ப்பனவாகும்.        சமுக நோக்குடைய பல பக்தி இலக்கியங்களையும் படைத்துள்ளார். இசையும் மரபும் (1974), வெற்றிலை மான்மியம், ஈழத்துச் சித்தர் சிந்தனை விருந்து(1984) காகப்பிள்ளையார் மான்மியம்(1983) முதலான இருபத்தைந்திற்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பல இளம் இலக்கிய கர்த்தாக்களை உருவாக்கிய பெருமையும் இவருக்குண்டு.