திருஞானசம்பந்த ஓதுவார்

தித்திக்கும் தீந்தமிழ் பனுவலான திருமுறைகள் சைவமதத்தினருக்கு கிடைத்திருக்கும் அரும்பெரும் பொக்கிசமாகும்.  அந்த இனிய பாடல்கள் முறையான பண்ணோடு பிழையின்றி ஓதப்படும்போது கிடைக்கும் இன்பமே அலாதி.  தேவார இசைமணி தாவடியூர் கே.எஸ்.ஆர். திருஞானசம்பந்தனார் ஒலிப்பேழைகளும் ஒலித்தட்டுக்களும் வெளியிட்டுள்ளார்.  தந்தையாரிடம் பண்ணிசை பயின்றவர்.  நல்லை ஆதீனமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பண்ணிசைப் புலவர், பண்ணிசை வேந்தர் என்ற பட்டங்களை வழங்கியுள்ளது.  1984ல் கிருபானந்தவாரியாரால் திருமுறை வித்தகர் பட்டமும் 1999ல் கைதடி சச்சிதானந்த ஆச்சிரமத்தால் அருளிசை அரசு பட்டமும் இந்து கலாச்சார அமைச்சினால் கலைஞானகேசரி பட்டமும் சர்வதேச இந்துமத குருபீடத்தால் பண்ணிசை கலாமணி பட்டமும் இந்துப் பேரவையால் சிவகலாபூஷணம் பட்டமும் இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் கலாபூஷணம் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

—நன்றி—-
வலம்புரி நாளிதழ், யாழ்