திரு.சுப்பையா உபாத்தியார்.

திரு.சுப்பையா உபாத்தியார்.

முதலித்தம்பியின் நான்காவது புத்திரன். இணுவில் கிழக்கைச் சேந்தவர். இலக்கண இலக்கியங்களை நடராச ஐயரிடமும், அம்பிகைபாகப் புலவரிடமும் கற்றார். தமது குலதெய்வமாக இணுவில் சிவகாமியம்மனை தொழுது வந்தார். கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சிவகாமியம்மன் கோவிலில் புராணங்களிற்கு உரை கூறியவர். அம்பிகை பாலப் புலவரின் மருமகன். அன்பும் பக்தியுணர்வும் கொண்ட இவர் இறுதிக் காலத்தில் நல்லூரில் வசித்தார்.

நன்றி : மூலம்- சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்