திரு.த.கந்தையா உபாத்தியார்.

இவர் இணுவிலைப் பிறப்பிடமாகவும் தாவடியை வதிவிடமாகவும் கொண்டவர். ஆரம்பக் கல்வியை அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் கற்றார். தொடர்ந்து கோண்டாவில் சைவ வித்தியாசாலையில் கல்வி கற்றார். இணுவிலில் உள்ள சைவமகாஜனாக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார். சிவகாமியம்மையாருக்கு அடிமையாகி கோயில்த் திருப்பணிகளை செய்யலுற்றார். அவ்வாலய இளைஞர் மன்றத்தில் இணைந்து பஜனை பாடினார். தனது வருமானத்தின் ஒருபகுதியை ஆலயத் தொண்டிற்கு செலவிட்டார். இவரிடம் கற்ற அனேகமானவர்கள் சிறந்த பதவி நிலையை அடைந்திருக்கின்றனர். இவ்வூர் மக்கள் பலர் முன்னேற வழிகாட்டிய பெருமகனாவார்.

நன்றி : மூலம் – சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்