திரு.பெரியதம்பி உபாத்தியார்.

இணுவில் கிழக்கிலே பிறந்தார். முதலித்தம்பியவர்களின் புதல்வனாவார். ஆரம்பக்கல்வியை அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையிலும், மேற்படிப்பை கோண்டாவில் சைவவித்தியசாலையிலும் கற்றார். கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலையில் தமிழாசிரியராகப் பயிற்றப்பட்டவர். கோண்டாவில் சைவவித்தியாசாலையில் ஒருவருடகாலம் உதவியாசிரியராக இருந்தபின் முப்பது வருடங்கள் தலமையாசிரியராக கடமையாற்றி

அங்கிருந்து ஓய்வு பெற்ற பின் கப்பனைப் பிள்ளையாரடியில் அமைந்த இராப் பாடசாலையில் கல்வி போதித்தவர். சிறந்த தெய்வ பக்தியும், நல்லொழுக்கமும், நற்பண்பும் மிகுந்து காணப்பட்டவர். திருமுறைகளைப் பண்ணுடன் பாடுவதில் வல்லவர். இவரிடம் கற்றோர் நல்ல உயர்நிலையில் இன்று வாழ்ந்து வருகின்றனர்.

நன்றி : தகவல் – திரு.வை.கதிர்காமநாதன்.
வைத்திலிங்க உபாத்தியாரின் மகன்.
மூலம்- சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்