திரு. வேலாயுதம்பிள்ளையாசிரியர்

மஞ்சத்தடியை பிறப்பிடமாக கொண்டவர். அமெரிக்கன் மிசன் தமிழ்;கலவன் பாடசாலையில்; ஆரம்பக் கல்வியை கற்றார். கோண்டாவில் சைவவித்தியாசாலையில் மேற்படிப்பையும் கற்ற இவர் ஆசிரிய பரீட்சையில் சித்தியெய்தி சைவவித்தியா விருத்தி சங்கப் பாடசாலையில் ஆசிரிய சேவையாற்றினார். கப்பனை விநாயகரிடம் மிகுந்த பக்தி கொண்டவர். புராணபடனம் சொல்லும்போது சிறப்பாக உரைசொல்லுவார். ஆசார சீலராகவும் சமூக சேவையாளராகவும் ஈடுபட்ட இவர் மஞ்சத்தடி கிராம அபிவிருத்திச் சங்கத்தில் சேவைசெய்தார். சிறந்த குரல் வளம் உடைய இவர் பண்ணிசை பாடுவதிலும், ஊஞ்சல் பாடுவதிலும் சிறந்து விளங்கினார்.

நன்றி : மூலம் – சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்