தெல்லிப்பளை பூலோகசிங்க முதலியார்

தெல்லிப்பளை பூலோகசிங்க முதலியார் எனும் அருளப்பநாவலர் காரைநகரில் பிறந்த தெல்லிப்பளையில் வசித்தவர்.  1680ல் ‘திருச்செல்வர் காவியம்” என்னும் பெருநூலை யாத்தார்.  இது 24 படலங்களையும் 1947 செய்யுட்களையும் கொண்டது.  பலவகை விருத்தப்பாக்களால் அமைந்தது.  இதே கதையை சாதாரண மக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் திருச்செல்வர் அம்மானை என்ற சிற்றிலக்கிய வடிவிலும் யாத்துள்ளார்.