தேசாபிமானி மாசிலாமனி

ஈழ நன்நாடு அரசியற் துறையிலே முன்னேறவும், தாய்மொழியிலே சிறந்தோங்கவும், தமிழ்ப்பண்பாட்டிலே வழுவாதிருக்கவும் வேண்டுமென்ற பெருநோக்கத்தோடு ‘தேசபிமானி’ என்ற பத்திரிகை மூலம் அருஞ்சேவை செய்தவர்தான் ஈழத்து ரி.பி.மாசிலாமணிப்பிள்ளை அவர்கள். திருவாங்கூர் உயர் நீதிமன்றத்து நீதி அரசராய் விளங்கிய செல்லப்பாப்பிள்ளையின் மரபுவழி வந்தவர் இம்மணி. ஆடிமை வாழ்க்கையை அறவே வெறுத்துச் சுதந்திர புருடராய் வாழ விரும்பிய இவரின் உள்ளம் பத்திரிகைத் துறையை  நாடியது. கொழும்பிலே ‘தி பீப்பிள்ஸ் மகசீன் (T.P.M)எனும் ஆங்கில வாரப்பத்திரிகையும் யாழ்ப்பாணத்திலே ‘தேசாபிமானி’ என்ற வார இரு முறைப்பத்திரிகையும் நடாத்தினார். கேலிச்சித்திரங்களையும்;, தீ    விரமானக அரசியல்-சமூக அபிப்பிராயங்களையும் வெளியிட்டதனால் ‘தேசாபிமானி’ ஒரு நிகரற்ற பத்திரிகையாக விளங்கிற்று. தேச ஊழியர் சங்கம், தமிழ் மகளிர் சங்கம், சங்கீத சமாயம் ஆகிய சபைகளை நிறுவி மக்களிடையே தேசபக்தியையும் கலா ரசனையையும் வளர்ச்சியுற செய்தமையால் மாசிலாமணிப்பிள்ளைக்குப் பெரும்பங்குண்டு. மாதவி வாசித்த மகரயாழைக் கண்டுபிடித்தபெருமை இவருக்குரியது. ‘இரசாயன சாஸ்த்திரம்’, ‘கிருகபரிபாலனம்’, ‘தென்னிந்திய சங்கீதம்’, ‘வாழ்க்கை நூல்’  என்பன அவரது எழுதுகோலீந்த பெரு நிதியங்கள். மகளிர் முன்னேற்றம் கருதி உழைத்த பெருமகனாருக்கு அவர் தம் மனைவியார் அமைத்த ஞாபகச்சின்னம் ‘தமிழ் மகள்’. ஆதை வாழ்விப்பது அவரைப் போற்றுதலாகும்.