புலவர் நடராசையர்

அந்தணர் குலத்திலே இணுவில் கிராமத்திலே அவதரித்தவர். இளமையிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களையும் வடமொழியையும் நன்கு கற்றார். சித்தாந்தத்தினையும் கற்றார். நாவலரிடம் தொல்காப்பியத்தையும் சித்தாந்தத்தினையும் கற்றுத் தேர்ந்து புலவர் பரீட்சையில் சித்தியும் எய்தினார். கவிபாடுவதிலும் சிறப்புற்று விளங்கினார். வண்ணார் பண்ணையில் சைவசித்தாந்தம் கற்பிக்கும் ஆசிரியராகவும் கடமையாற்றினார். பரராஜ சேகரப் பிள்ளையார் ஆலய பூசகராகவும் கடமையாற்றினார். சோதிடம், வைத்தியம், மாந்திரீகம் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார். சைவத்தினையும் தமிழையும் நன்கு ஆதரித்ததுடன் சிவஞான சித்தியார் சுபக்கம், ஞானப்பிரகாசர் உரையினையும் ஆராய்ந்து அச்சேற்றி வெளியிட்டார். ஆசாரமாகவும் நல்லொழுக்கமாகவும் வாழ்ந்து பெருமை தேடியவர்.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்