மாணிக்கம் ஆனந்தர்.

மாணிக்கச்சட்டம்பியாரின் அருந்தவப் புதல்வர். சட்டம்பியார் அவர்கள் கல்வியில் விற்பன்னராக விளங்கியமையால் புதல்வர்களையும் சிறந்த கல்விமானாக உருவாக்கினார். இணுவிலிலே வாழ்ந்த பஞ்சவர்ணம் என்பவரினை இல்லாளாக ஏற்றுக் கொண்டார். இவ்வம்மையார் இணுவில் இந்துக் கல்லூரி அதிபராக கடமையாற்றினார். சபாவதியானந்தர் நிகழ்த்திய விளக்கவுரையில் தாமும் இணைந்து விரிவுரைகள் நிகழ்த்தினார்.

இணுவில் சிவகாமியம்மையின் அன்னதான மண்டபத்தில் 1990 இல் சைவசமய தத்துவங்களை சிறார்களிற்கு போதித்ததன் மூலம் இன்றைய அறநெறிப்பாடசாலை உருவாவதற்கு வழிகோலினார். இவர் மறுமை எய்தியதும் இவரது தொண்டு நிலைத்திருக்கின்றது.

நன்றி : மூலம் – சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்