றமேஸ்- சந்தோஸ் இசையமைப்பாளர்கள்

அளவெட்டி மைந்தர்கள் சந்தோஸ் மற்றும் றமேஸ் ஆகியோரின் இசைமுயற்சியினால் காதல் காதல் எனும் இசை அல்பம் ஒன்று உருவாகியுள்ளது.சந்தோஸ் இசையமைத்த இவ்
இசை அல்பத்தில் றமேஸ் தனது குரலில் இனிய பாடல் ஒன்றை பாடியுள்ளார். கும்பழாவளை விநாயகர் ஆலய குருக்கள் சந்திரன் ஐயாவின் இளைய புதல்வரான இவர் தற்போது லண்டனில் வசித்து வருகின்றார். காட்சியமைப்புச் செய்யப்பட்டுள்ள இப் பாடலில் றமேசுடன் செல்வி எனும் பெண் நட்சத்திரம் இணைந்து தோன்றியுள்ளார்.

இப் பாடலுக்கு இசையமைத்தவர் லண்டண் வாழ் அளவெட்டி மைந்தன் திரு.புலேந்திரன் ஜனார்தனன். சந்தோஸ் எனும் புனைபெயரில் பல பாடல்களுக்கு இசையமைத்த இவர் ஓர் வளர்ந்து வரும் இளம் தலைமுறை இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது இசைப்பயணம் தொடர எமது இணைய குடும்பத்தின் மனம் திறந்த வாழ்த்துக்கள் என்றும் அவர்களுக்கானது.

பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்…
றமேசின் பாடல்

நன்றி – அளவெட்டி இணையம்