விழிசிட்டி பண்டிதர் கதிரிப்பிள்ளை

சுன்னாகம் குமாரசுவாமிப்புலவரிடம் நீண்ட காலம் பயின்றவர். புலவர் எழுதியசில நூல்களை உருவாக்குவதிலும் ஈடுபட்டவர் இவர் நீண்ட காலம் ஆசிரியராகவும் பாடசாலை அதிபராகவும் இருந்து பணியாற்றினார் அதனால் அவர் நூலகத்துறையில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் உயிருள்ள புத்தகங்கள் ஆகிய பெரும்தொகைத் தமிழறிஞர்களை உருவாக்கினார்.

அவருடைய மகன் க.உமாமகேஸ்வரர் சிறந்த அறிஞர். அவர் தமிழ்,ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய பன்மொழிப்புலவர். கவிதை, கட்டுரை எழுதுவதில் வல்லவர். அண்மையில் இங்கிலாந்து சென்ற அவருடைய “அதீதரன்” என்ற கட்டுரைத் தொகுப்புநூலை அங்குள்ள அம்பனைக் கலைப் பெருமன்றம் (ஜ.இ) (ரு.மு) வெளியிட்டது.