வேலாயுதம் சந்நியாசியார்.

பெரிய சந்நியாசியாரின் மூத்த புதல்வன். இவர் மஞ்சத்தடியில் வசித்தவர். பெரிய சந்நியாசியாருக்கு  உறுதுணையாக இருந்து சகல விதத்திலும் செயலாற்றினார். பெரிய சந்நியாசியாரின் சமாதிக் கருமங்களையும் இவரே பூர்த்தி செய்தார். பெரிய சந்நியாசியாரால் பூசிக்கப்பட்ட வேலாயுதத்தை அவர் சமாதிக்குப் பின் அவரது சமாதியில் நாட்டியபின் உரிய காலத்தில்;  அருணகிரி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலை அமைத்து சகல வழிபாடுகளுக்கும் பொறுப்பாயிருந்து பரிபாலி;த்தவர். இறையருளாலே நோய் பிணிகளை நீக்குவதற்கு திருநீற்றைப் போட்டு பார்வை பார்த்து மக்களின் துயர் துடைத்தார். முருகன் அருளாளே தன்னால் ஆன பணிகளைச் செய்து மக்களிடம் பக்திபூர்வமான அன்பைப் பெற்றார். இவர் மறுமை எய்தியதும் இவர் மகன் ஆறுமுகம் என்பவரே இவர் பணியினைத் தொடர்ந்தார்.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

1 review on “வேலாயுதம் சந்நியாசியார்.”