வை.தியாகராசாச் சுவாமியார்.

யாழ்ப்பாணத்தின் பக்தர்கள் நிறைந்த கோயில்களிலே களைகட்டிய பஜனைக் கோஷ்டிகளில் நடுநாயகமாக தியாகராயரினைக் காணலாம்.    சிவந்த மேனி, நெடியதோற்றம், நல்ல சரீரவளம், கையிலே சப்பாளக் கட்டை சுருதியிலே ஆனந்தத் தாண்டவமாடிய நிலையில் பக்திப் பரவச நிலையிலே இவரினைக் காணலாம்.

இவரது குடில் காரைக்காலிலே அமைவுபெற்றுள்ளது. திவ்ய ஜீவன சங்கம் அமைத்து தியானக் கலை பரப்பியவர். பக்தர்கள் பல சூழ வாழ்ந்த இல்லற ஞானி தலயாத்திரையுடன் கூடிய தவவாழ்வும் வாழ்ந்தவர்.     பக்தராகவும், சித்தராகவும், தவயோகியாகவும் வாழ்ந்தார். இறுதியில் பித்தர் என்று கூறக்கூடிய அளவில் வாழ்ந்தார்.

காரைக்காலில் தாம் வாழ்ந்த குடிலிலே கூடுதறந்தார். சமாதிக் கோலத்திலேயே இவருடைய பூதவுடல் இருந்தது. அத்தேகம் அசைவற்று இருந்தது. அழுகவில்லை, துர்நாற்றம் வீசவில்லை அபிசேகம் செய்து அவருடைய உடலை அனுப்பிவைத்தனர்.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்