ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகள்

நயினைச்சித்தர் எனப் போற்றப்படும் ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகள் நயினை நாகபூசணி அம்பாள் அருளாட்சி புரியும் மண்ணில் 1986 ல் அவதரித்து புண்ணிய பூமியான இந்திய மண்ணில் குரு உபதேசம் பெற்று சந்நியாசம் பெற்றுக்கொண்டு திருவண்ணாமலையில் சித்தர்களும் தவயோகிகளும் வாழும் அருணாசல குகைகளில் வருடக்கணக்கில் சமாதி நிஷ்டையில் அமர்ந்திருந்த மகான் ரமண மகாரிஷியுடன் சில காலம் தங்கியிருந்து ஆன்ம லயம் பெறும் அரும்பேறுபெற்றவர்.

அருளாளரின் அருளாசிகள் யாழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டிய பேறு இருந்ததால் 1933 ம் ஆண்டு ஏற்கனவே இலங்கைக்கு திரும்பி பித்தர் போல திருத்தல யாத்திரைகளை மேற்கொண்டிருந்த சுவாமிகள் நயினாதீவு திரும்பி அங்குள்ள அடியவர்க்கு அருளாசி வழங்கி வந்தார். அக்காலத்தில் நயினாதீவு நாகபூசணி அம்பாள் தீர்த்தமாடும் தீர்த்தக்கேணியாகிய கங்காதரணி தீர்த்தக்கேணியை வைரக்கற்களால் கட்டுவதற்கு அருள் புரிந்தார்.
இவர் அக்காலத்தில் வண்ணார் பண்ணை சிவலிங்கப்புளியடி இணுவில் காரைக்கால் சிவன்கோவிலடி ஆகிய இடங்களில் அடிக்கடி நடமாடி அடியார்களுக்கு அருளாசி வழங்கியுள்ளார். குடைச்சாமி எனப்போற்றப்படும் இவருடைய அருளாசி பெற்றவருள் சிறந்தவராவார். சுவாமிகள் 1949 ம் ஆண்டு வண்ணை சிவலிங்கப் புளியடியில் சமாதிக் கலப்புற்றார். அவரால் ஏற்கனவே செய்து வைத்த ஒழுங்குகளின் படி இணுவில் பரமானந்த வல்லி ஆச்சிரம வடிவேற் சுவாமிகளின் மேற்பாற்வையில் நயினாதீவில் அவரது சமாதி அமைக்கப்பட்டது. தற்போது சமாதி சோமஸ்கந்த ஈஸ்வரர் ஆலயமாக திகழ்கின்றது.

2 reviews on “ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகள்”

  1. karaiks vijayan.k.s சொல்கின்றார்:

    1986 ல் அவதரித்து– ஆண்டு பிழையாக உள்ளது

  2. vijayan.k.s சொல்கின்றார்:

    1986 ல் அவதரித்து– ஆண்டு பிழையாக உள்ளது