தெல்லிப்பளை ஆ.சிவநேசச் செல்வன்

மூத்த பத்திரிகையாளராக விளங்கினார். வீரகேசரிப் பிரதம ஆசிரியராக இருந்த இவர், தற்போது தினக்குரல் பிரதம ஆசிரியராகப் பணிபுரிகின்றார்.

ஈழநாட்டிலே தமிழ்ப்பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும் (1974) எனும் ஆய்வு நூலையாத்துள்ளார். இவர் “காலத்தின் பின்னணியில் ஆறுமுக நாவலர், ஞானப் பிரகாசரும் தமிழாராய்ச்சியும், பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை வாழ்க்கையும் பணியும்(1974) முதலான பல நூல்களின் ஆசிரியருமாவர்.