நெடுந்தீவு மக்களும் வரலாறும்

சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி (முன்னாள் பிரதிக் கல்வி பணிப்பாளர், இலங்கை) அவர்களால் 2003 ம் ஆண்டு ரொறன்ரோ கனடாவில் வெளியிடப்பட்ட புத்தகமாகும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் கேந்திர முக்கியமான தீவுகளில் இது முதன்மையானது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரசர்களும் அன்னியர்களான போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரும் கோட்டைகளை கட்டி பரிவாரங்களுடன் இங்கிருந்தே ஏனைய தீவுகளை ஆட்சி செய்தனர். காரணம் இத்தீவு தென் இந்தியாவிற்கு மிக அண்மையில் இருந்தமையும் தங்களின் பாதுகாப்பை கருதி தென் இந்தியாவில் இருந்து வரும் எதிரிகளை கண்காணிக்க கூடிய முக்கிய இடத்தில் இருந்தமையுமாகும். இதனால் நெடுந்தீவு பல வரலாறுகளை கொண்டுள்ளது. இந்த வரலாறுகள் வெடியரசன் காலத்தின் பின்னரே வெளியுலகிற்கு தெரிய வந்தன.







Copyrights © 2008-2023 ourjaffna.com
Leave a Reply