இணுவில்

ஊருலகத்தவரால் உவந்து போற்றப்படுவதும் திருமூலநாயனாரால் சிவ பூமி என அழைக்கப்பட்டதும் ஆகிய நாட்டின் வடபால் அமைந்துள்ளது யாழ்ப்பாணம். அதன் வடபால் ஆறு கிலோமீற்றர் தொலைவில் காங்கேசன்துறை வீதியின் இருமருங்கும் விளை நிலங்கள் செறிந்த பசுமையான சூழலில்  சுன்னாகம் சிராமத்தின் தெற்கு எல்லையாக அமைந்த உறட் ஆல் என்ற குறிச்சி வரை பரந்து விளங்குவது இணுவில் என்னும் ஊர்.

தொன்மை வாய்ந்த ஊர்.

இதனை இணையிலி எனப் பண்டை நூல்கள் கூறும். கைலாயமலை என்ற தொன்னூல் அதனை வலியுறுத்துகின்றது.

“கரும்பும், கமுகும், வாழையும், நெல்லும், செழித்தோங்கும் வளமுடைய இணுவில் என வழங்கும் இணையிலி”

என்ற வரிகள் அந்நூலில் காணப்படுகின்றன.