உசன்

உசன் என்ற அழகுமிகு கிராமம் யாழ் மாவட்டத்தில் தென்மராட்சிப் பகுதியில் உள்ளது. யாழ் நகரில் இருந்து 18 மைல் தூரத்தில் கண்டி வீதியை அண்மித்து உள்ளது. உசனின் எல்லையாக வடக்கே மிருசுவிலும், கிழக்கே கரம்பகமும், விடத்தற்பளையும், தெற்கே கெற்பேலியும், மேற்கே தவசிக்குளத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

ஏறத்தாழ 5 சதுரமைல் பரப்பைக் கொண்டது உசன் கிராமம். குடியிருப்புப் பகுதிகளைத் தவிர ஏனையவை வயல்கள், தோட்டங்கள், தென்னந்தோப்புகள் கொண்டுள்ளது. உசனுக்கு என பஸ்சேவையும் உண்டு.

100 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட பாடசாலை

ஊரின் இரு கண்கள் என்று கூறக்கூடியதாக இருப்பது பாடசாலையும், முருகன் ஆலயமும். பாடசாலையின் பெயர் உசன் இராமநாதன் மகாவித்தியாலயம். இதன் கீழ் பல சிறிய பாடசாலைகள் (கொத்தணி) உண்டு. இப்பாடசாலை ஆரம்ப காலத்தில் சைவப்பிரகாசாலை என்ற பெயரில் இயங்கியது. சிற்றம்பலம் மாஸ்ரர் என ஊர் புகழ்ந்த அவர், சைவப்பிரகாசாலை அதிபராகிப் பல வருடம் நற்சேவையாற்றி அதனை மகாவித்தியாலயம் ஆக உயர்த்தினார். ஊரைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து பல மாணவர்கள் கல்வி பயில வருகின்றனர். தென்மராட்சி கிழக்கில் பிரபல்யமான பாடசாலை இது. வருடந்தோறும் குறிப்பிட்ட தொகையினர் பல்கலைக்கழகம் செல்ல இப் பாடசாலை வழிவகுக்கின்றது.

Add your review

12345