ஒட்டுசுட்டான்

ஒட்டுசுட்டான் கிராமம் ஆனது 16ம் நூற்றாண்டின் ஆரம்பம் இலங்கையின் வடக்கே யாழ்பாணத்தில் போர்துக்கீசரின் ஆட்சி தொடங்கிய காலம். அங்கு போர்துக்கீசருடன் முரண்பட்ட, யாழ் இடைக்காட்டைச் சேர்ந்த தீரபுத்திரன் எனும் கிராமவாசி, யாழ் இடைக்காட்டில் இருந்து தனது குடும்பத்தினருடன் வன்னிக்கு இடம்பெயர்ந்தார். அவர் முதலில் வசித்தது உடையார் சம்மளம் குளத்தில். தற்போது இப்பகுதி மக்கள் அற்ற காட்டுப்பகுதியாக உள்ளது. மணவாழன்பட்டை முறிப்பிற்கும், ஒட்டுசுட்டானிற்கும், முத்தையன் குளத்தின் அலகரைக்கு மேலேயும் உள்ள பகுதிதான் உடையார் சம்மளம்குளம். இப்பகுதியில் இருந்து மக்கள் ஏன் இடம்பெயர்ந்து வேறு இடத்திற்கு சென்றனர்? மற்றும் எப்போது இது நடந்தது? என்று சரியாகத் தெரியவில்லை.

இதற்கு மிகவும் அண்மையில் உள்ள இன்னுமோர் கிராமம் அன்னதேவன் மடு. இதுவும் தற்போது அடர்ந்த காட்டுப்பகுதியாகவே உள்ளது. இதன் வரலாறும் சரியாகத்தெரியவில்லை.

உடையார் சம்மளம் குளத்தில் வசித்த தீரபுத்திரன், தற்போது தான்தோன்றி ஈசுபரர் கோவில் உள்ள இடத்தில், தினைப் பயிர்செய்து வந்தார். பின்னர் இவ்விடத்திலேயே தான்தோன்றி ஈசுபரர் சுயம்பாகத் தோன்றிய வரலாறு நிகழ்தது.

தீரபுத்திரனின் சந்ததியினரே ஒட்டுசுட்டானின் பூர்வீகக் குடிகள். இவரின் சந்ததியினரே தான்தோன்றி ஈசுபரர் கோவிலிலை பராமரித்து வருபவர்கள் ஆவார்கள். பின்னர் இக்குடிகள் தமது விவசாயத் தேவைகளுக்கும், கூலிக்கும் என சில குடும்பங்களை குமிழமுனை மற்றும் அதன் அண்டிய கிராமங்களில் இருந்து அழைத்து வந்து ஒட்டுசுட்டானில் குடியேற்றினர். இவர்களின் சந்ததியினரும் தற்போதும் ஒட்டுசுட்டானில் வாழ்ந்து வருகின்றனர்.

ஒட்டுசுட்டானில் தீரபுத்திரனின் சந்ததியினர் 1940ம் ஆண்டு வரை யாழ் இடைக்காட்டுடன் திருமணரீதியான தொடர்பை வைத்துக் கொண்டுள்ளனர் என அறியக் கிடைக்கின்றது. பின்னர் அத்தொடர்பு அற்றுப் போய்விட்டது. தற்போது அந்த யாழ் வாசனையே பலரிடம் இல்லாமல் போய்விட்டது.

By -‘[googleplusauthor]’

Add your review

12345