பன்னாலை

உடுவில் முத்துக்குமாரக்கவிராயர் நாமாந்திரிகை என்னும் பிரகேளிகை வகை அமைத்துப் பாடிய பாடலொன்றில் பன்னாலையான் மிக உருத்தனன் என்றொரு இடத்தில் கூறுகிறார். பிரகேளிகையில் பன்னாலையான் என்பதன் பொருள் “கரும்பு வில்லை உடைய மன்மதன்” என்பதாகும். பல கரும்பு ஆலைகள் முன்பு இருந்த பதி பன்னாலை தெல்லிப்பளையில் ஒரு கிராமமாகும்.

கிழக்கே அம்பனையில் இருந்து கொல்லங்கலட்டி ஊடாகச் செல்லும் வன்னியசிங்கம் வீதி, தெற்கே அம்பனையிலிருந்து அளவெட்டி ஊடாகப் பண்டத்தரிப்பு செல்லும் வீதி, மேற்கே அளவெட்டியிலிருந்து மயிலங்கூடல் கருகம்பனை ஊடாகக் கீரிமலை செல்லும் வீதி, வடக்கே கொல்லங்கலட்டி வீதியிருந்து நீலாவத்தை, வித்தகபுரம், செம்பாடு ஊடாகக் கீரிமலை செல்லும் வீதியுடன் அம்பனை வயலும் பன்னாலைக்குரியதே.

Add your review

12345