அ. செ.முருகானந்தன்

மகாஜனாக் கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலேயே சிறந்த எழுத்தாளாராக விளங்கினார் அப்பொழுதே ஈழகேசரியின் ஆசிரியர் குழுவிற்சேர்ந்து தீவிரமாக எழுத்துத் துறையில் ஈடுபட்டார். இதே காலத்தில் மறுமலர்ச்சிச் சங்கத்திலும் முக்கிய உறுப்பினராக இருந்து செயற்பட்டார். அதேகாலத்தில் இராஜ. ஆரியரத்தினம் ஈழகேசரியின் முதன்மையாசிரியராகப் பதவியேற்ற போதிலும் தமிழகம் சென்றுவிட்டதால் அ.செ.மு அவர்களே ஈழகேசரியின் ஆசிரியராகச் செயற்பட்டார். இதனால் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் இதில் எழுதிக் குவிக்க முடிந்தது. அ.ச.மு ஈழகேசரியில் பீஷ்மன் என்ற புனைபெயரில் ஆங்கில நாவல் ஒன்றை அலிபாபாவின் குகை என்ற தலைப்பில் தொடர்ந்து மொழிபெயர்த்து வெளியிட்டார். வண்டிச்சவாரி என்ற தலைப்பில் தொடர்கதை எழுதி ஈழகேசரியில் வெளியிட்டார். ஜெர்மன் மொழியில் வில்கெல்பஸிமித் எழுதிய நாவலை ‘போட்டி’ என்ற பெயரில் எழுதி வெளியிட்டார்.

அ.செ.மு. 1950 களில் எரிமலை எண் இதழைத் திருமலையில் இருந்து வெளியிட்டார் அப்போது எரிமலைப் பதிப்பகத்தில் ‘புகையில் தெரிந்த முகம்’ என்ற புனைகதையை வெளியிட்டார்.  சில விமர்சகர்கள் இதனை நீண்ட சிறுகதை என்பர் வேறு சிலர் குறுநாவல் என்பார்.

Add your review

12345