இராசயோகன் இராசவல்லவன்

இவர் 0945.10.17 ல் மானிப்பாயில் பிறந்தார். தற்போது ஆனைக்கோட்டையில் வசித்து வருகிறார். 1997 இலிருந்து எழுத்துத்துறை, கலைத்துறை மூலம் கலைப்பயணத்தில் காலடி வைத்தவர்.

கிராம சேவை அலுவலராக கடமையாற்றும் போது மானிப்பாய் இந்து அபிவிருத்தி சங்கத்தில் உறுப்பினராகவும், வயோதிப சங்க தலைவராகவும் இருந்து சமூகப் பணிகளையும், தனது கலைச்சேவைகளையும் ஆற்றி வந்தார். ”ஆசையினாலே மனம்” எனும் சிறுவர் கதைப் புத்தகத்தினை எழுதி வெளியிட்டார்.

2004, 2005 ம் ஆண்டு அரச சேவையாளர்களுக்கான நிர்மாணப் போட்டியில் சிறுவர்களுக்கான சிறுகதை, கவிதை எழுதுதல் போட்டியில் வெற்றி பெற்று சான்றிதழ்கள் பெற்றுள்ளார். 2006 ம் ஆண்டு சண்டிலிப்பாய் பிரதேச செயலக கலாசார விழாவில் ”கலைஞாயிறு” என்ற பட்டம் வழங்கி அரச அதிபரினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

Add your review

12345