கணபதிப் பிள்ளை சுவாமியார்.

செகராயசேகரப் பிள்ளையார்  ஆலயச்சூழலிலே தவக்குடில் அமைத்து வாழ்ந்தவா் கணபதிப் பிள்ளை சுவாமியார். பிரமச்சாரியாராக தனது வாழ்வினை ஏற்று பிள்ளையார் ஆலயத்திற்கே கோயிற் தொண்டுகளையும், திரு விளக்கேற்றலையும் சிறப்புறச் செய்து வந்தார். இளஞ்சந்ததியினரும் ஆலயப் பணியில் ஈடுபடும் வகையில் பயிற்சியும் அளித்தார். நோயினால் வாடியவருக்கு திருநீறு இட்டுப் பார்வை பார்த்து அவர்களை குணமடையச் செய்வார். துன்பங்களைத் தம்மிடம் கூறுவோருக்கு அருள்வாக்கும் சொல்லுவார். கணபதிப் பிள்ளை சுவாமியார் அவர்கள் உயரத்திலே குறைந்தவராய் குறுமுனி வடிவம் வாழ்ந்து உரியகாலத்திலே சமாதியடைந்தார்.

 By – Shutharsan.S

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்