கவிஞர் விடிவெள்ளி க.பே. முத்தையா

கவிஞர் விடிவெள்ளி க.பே. முத்தையா அவர்கள் பிறப்பு 31.08.1914 மறைவு 26.05.1964. யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி கிழக்கு உடுத்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் நல்லூர் சாதனா பாடசாலையில் தலமையாசிரியராக இருந்த காலத்தில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வாழ்ந்தவர்.

கவிஞர் விடிவெள்ளி க.பே. முத்தையாதனது ஐம்பதாவது அகவையில் நல்லூர் சாதனா பாடசாலையின் தலமை ஆசிரியராக கடமையாற்றிய காலத்திலேயே இவர் மறுமைக்குள் கலந்தார். உடுத்துறைத் திருச்சபையின் விசித்திர சரிதம், தமிழ், அறிவு, கட்டுரைக்கதிர், தமிழ் சூழற்பயிற்சிகள், சிலுவையும் செந்தமிழும் முதலான நூல்களை கல்வியுலகிற்கு கையளித்தார். இலங்கைத் தமிழ் புத்தக வெளியீட்டகம், இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம், இலங்கை கம்பன் கழகம், யாழ்ப்பாண தமிழாசிரியர் சங்கம், யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசம் ஆகிய அமைப்புகளின் பொறுப்புள்ள பதவிகளை வகித்து தமிழுக்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் அளப்பரிய பணி ஆற்றினார். கவிஞராக விளங்கிய இவர் பல கிறிஸ்தவ பாடல்களை ஆக்கித் தந்தார்.
யுhழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாச வெளியீடான “சமூகத்தொண்டன்” மாத இதழுக்கு ஆசிரியராக இருந்து செயற்பட்டார். 1948-1954 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரித் தமிழ் பாடசாலை தலைமையாசிரியராக பணியாற்றினார். சமூகத்தொண்டன் மாத இதழின் மூலம் பல புதிய இளம் எழுத்தாளர்களை இனங்கண்டு இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தினார். புல அற்புதமான பேச்சாளர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்குண்டு. ஈழத்துச் தமிழ்ச் சமுதாயத்தில் பேராற்றல் மிக்க கவிஞராக, நகைச்சுவைப் பேச்சாளராக மிளிர்ந்தார். சொற்பொழிவா? பட்டி மன்றமா? கவியரங்கமா? அங்கெல்லாம் கவிஞர் முத்தையா இருந்தாக வேண்டும் என்ற நிலைமையொன்று இம்மண்ணில் ஒரு காலத்தில் இருந்தது. “தமிழறிவு” என்ற நூல் உடுத்துறை திருச்சபையின் “விசித்திர சரித்திரம்”, “பாலர் நேசன்” பத்திரிகை ஆகியவற்றின் ஆசிரியராக விளங்கினார். தமிழ்த் தேசிய உடையையே இவர் அதிகம் விரும்பினார்.
ஆசிரியர், இலக்கிய ஆர்வலர், பத்திரிகையாளர், நற்செய்தித் திருத்தொண்டர், தொழிற்சங்கவாதி ஆகிய எல்லாத் துறைகளிலும் பார்க்க ஈழத்துத் தமிழ்ச் சமுதாயம் அவரைத் திறமை சார்ந்த ஒரு கிறிஸ்தவ தமிழ்க் கவிஞராகவே இனங்கண்டு கௌரவித்தது.

By -‘[googleplusauthor]’

 

நன்றி – கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர்

Add your review

12345