கானாமிர்தன் கலாபூஷணம் கானமூர்த்தி

ஈழத்து நாதஸ்வர மேதை கானாமூர்த்தி இசையையே பெயராகக் கொண்ட மாபெரும் கலைஞன்.  இலங்கை அரசு கலாபூஷணம் என்னும் பட்டமளித்து கௌரவித்தது.  நாதஸ்வரச் சக்கரவர்த்தி விஸ்வலிங்கம் கோதண்டபாணிக்கும் ராஜராஜேஸ்வரிக்கும் மூத்த மகனாக 1945ல் பிறந்தார்.  10 வயதில் நாதஸ்வரம் கற்கத் தொடங்கினார்.  1963ல் சகோதரன் பஞ்சமூர்த்தியுடன் கச்சேரி செய்தனர்.  1967ல் இருவரும் அரங்கேற்றம் கண்டனர்.  இசைப் பணியின் 25 ஆண்டு நிறைவு விழாவை யாழ் பல்கலைக்கழகம் விமரிசையாக நடாத்தியது.  அருட்கவி வினாசித்தம்பியால் “நாதகலாநிதி” என பட்டமளித்து கௌரவிக்கப்பட்டது.  சர்வதேச இந்துமத குரு பீடத்தால் “இசைஞான கலாநிதி” பட்டமும் பறாளாய் சுப்பிரமணிய தேவஸ்தானத்தால் “நாதஸ்வர கானஇசைமணி” பட்டமும் வெள்ளிவிழாவின்போது நாதஸ்வர இசைமணிகள், நாதஸ்வர கானவாருதிகள், நாகாமிர்த கானவேலன், நாதாமிர்த கிரவுஞ்சம் பட்டமும் அளித்த கௌரவிக்கப்பட்டார்.

Add your review

12345