குமாரசாமிப்புலவர் – சுன்னாகம்

புலவர் ஞாயிறு 18 தை மாதம் 1854 ல் பிறந்தார். புதன்கிழமை 25 மாசி மாதம் 1922 ல் மறைந்தார். 1870 ம் ஆண்டு முதல் நாவலர் இருக்குமளவும் தனக்குள்ள இலக்கண இலக்கிய சந்தேகங்களை கேட்டுக் கற்றுத் தேர்ந்தார். முத்துக்குமார கவிராயர் இவருடைய பாட்டனார். முருகேச பண்டிதரின் மகனாவார். புலவருக்கு இளமைத் தமிழ் ஆசிரியரும் இவரே. பெருமளவு(60 ற்கு மேல்) நூல்களை இயற்றியுள்ளார். செய்யுள் நூல்கள் (வதுளைக்கதிரேசன் பதிகம் – 1884…), இலக்கிய உரை நூல்கள் (திருவாதவூரர் புராணப்புத்துரை – 1904….), இலக்கண உரை நூல் (தண்டியலங்காரப்புத்துரை – 1903..), இலக்கண ஆராட்சி நூல் (வினைப்பகுபதவிளக்கம-1913;), வசன நூல்கள்(கண்ணகி கதை -1900…), பதிப்பு நூல்கள் (ஆசாரக்கோவை – 1900…), தொகுப்பு நூல்கள் (சிவதோத்திரத்திரட்டு – 1911..), அகராதி (இலக்கிய சொல் அகராதி – 1915) எனப்பலவாகும்.

Add your review

12345